கல்வி உரிமைச் சட்டத் தொகையை விடுவிக்க கோரிக்கை

ராமநாதபுரம் தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கட்டாய கல்வி உரிமைச் சட்டத் தொகையை விடுவிக்க கோரி தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நல சங்கத்தினர் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத் தொகை விடுவிக்க கோரி மாவட்ட கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நல சங்கத்தின் மாவட்டத் தலைவர் முனிசாமி மாவட்ட செயலாளர் நயிமுதீன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் நசுருதீன் ஆகியோர் இணைந்து மனு வழங்கினார்.

அதில் தெரிவித்ததாவது 2022-23, 2023-24ஆம் ஆண்டிற்கான கட்டாய கல்வி உரிமைச் சட்ட தொகைகள் இந்த மாத இறுதிக்குள் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசின் உத்தரவுப்படி 1ஆம் வகுப்பு முதல் மாணவர் சேர்க்கை செய்திட வேண்டும் என்றும் மூன்று வகையான சான்றிதழ்களை ஆய்வு செய்து புதுப்பித்தல் தொடர் அங்கீகார ஆணை மூன்று ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும் என்றும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் தொடர்ந்து பத்து ஆண்டுகள் அங்கீகாரம் பெற்று செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து வழங்கினார்.

Tags

Next Story