மழையால் பாதிப்பு : ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை

மழையால் பாதிப்பு : ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் 

மழையால் பாதித்த பகுதிகளை பேரிடர் மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், மாதானம் ,மயிலாடுதுறை, செம்பனார்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரில் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளில் குறைகளையும் கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளிடம் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த 7 தேதி முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து பெய்து கனமழையின் காரணமாக கடலோர மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் டெல்டா பகுதியில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி பேரிழப்பை சந்தித்துள்ளது.

விவசாயிகள் ஏக்கருக்கு ரூபாய் 35 வரை செலவு செய்து விவசாய பணி மேற்கொண்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையின் போது பெரும் பாதிப்பை சந்தித்தனர்.அதிலிருந்து ஓரளவு மீண்ட விவசாயிகள் தற்போது முற்றிலும் அழிவை சந்தித்துள்ளனர்.

அவர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் தமிழக அரசு மட்டுமே நிதியை நிவாரணமாக வழங்கி வருகிறது .அது போதாது ஒன்றிய அரசு பாரபட்சம் இல்லாமல் தமிழகத்திற்கு பேரிடர் மாவட்டமாக அறிவித்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்

Tags

Next Story