சாலையில் உள்ள விளம்பர பலகையை அகற்ற கோரிக்கை

சாலையில் உள்ள விளம்பர பலகையை அகற்ற கோரிக்கை

விளம்பர பலகை அகற்ற கோரிக்கை 

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூரில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் உள்ள விளம்பரப் பலகை மற்றும் பேரிகார்டுகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொன்னையூரிலுள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.பொன்னமராவதி-புதுக்கோட்டை சாலையிலிருந்து கொன்னையர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் பிரிவு சாலை அருகே விளம்பர பலகைகள், வழிகாட்டிப் பலகை மற்றும் பேரி கார்டுகள் உள்ளன.

இதனால் கோயிலிலிருந்து நெடுஞ்சாலைக்கு செல்லும் பொதுமக்களுக்கு அந்த வழியில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை எனவும், மேலும் அடிக்கடி சிறுசிறு விபத்துகள் நேரிடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, விளம்பரப் பலகைகள் மற்றும் பேரிகார்டுகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story