அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரிக்கை

அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரிக்கை

கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை 

குலசேகரம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட குலசேகரம் அருகே கூடைதூக்கி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சிறிய குழந்தைகள் அங்கன்வாடிக்கு தினமும் செல்கிறார்கள் அங்கன்வாடி செயல்படும் கட்டிடம் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். அதன் பிறகு இந்த கட்டிடம் எந்த வித பராமரிப்பும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.

கட்டிடத்தின் மேல் பகுதி பழுதடைந்து சிமெண்ட்கள் கட்டைகள் பெயர்ந்து காணப்படுகிறது இதனால் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு அதன் உள் பகுதியில் தண்ணீர் கொட்டுகிறது அதன் பக்க சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது பெய்து வரும் கன மழையால் மேல் பகுதியில் இருந்து அதிக அளவு தண்ணீர் கசிந்து உள்பகுதிக்கு வருகிறது.

இந்த கட்டிடத்தில் தான் தினமும் சிறிய குழந்தைகள் படித்து வருகிறார்கள். இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பெற்றோர்கள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு பல்வேறு கோரிக்கைகள் அனுப்பினார்கள் ஆனால் எந்த ஒரு அதிகாரியும் இதுவரைக்கும் வந்து பார்வையிடவில்லை.

எனவே பெரும் விபத்து நடைபெறும் முன் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த கட்டிடத்தை பார்வையிட்டு மாற்று கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story