ரிங் ரோடு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

ரிங் ரோடு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசலை குறைக்க ரிங் ரோடு பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரம் கல்வி மற்றும் தொழில் சார்ந்த பெரிய நகரமாகும், இங்கு மிகப்பெரிய கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள் நிறைய உள்ளது_முகூர்த்த நாட்களிலும் திருவிழா நாட்களிலும் திருச்செங்கோடு நகர் முழுவதும் போக்குவரத்தால் ஸ்தம்பித்து விடுகிறது, இதனை கருத்தில் கொண்டு ரிங் ரோடு (சுற்றுவட்டச் சாலை) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சங்ககிரி பால்மடை பகுதியில் இருந்து சேலம் ரோடு, நெய்க்காரப்பட்டி, வழியாக ராசிபுரம் சாலை மாதா கோவில் அருகே சுற்றுவட்டப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது, மேலும் மாதா கோவிலில் இருந்து போக்கம்பாளையம் வழியாக வேலூர் சாலையில் மீன்கிணறு பகுதியில் அடுத்த சுற்று பாதை பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இந்தப் பணிகளை விரைவில் துவங்கி சாலை பணிகளை சீர் செய்து கொடுத்தால் போக்குவரத்து நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் வெகுவாக குறையும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.





Tags

Next Story