முடி திருத்தகங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க கோரிக்கை

முடி திருத்தகங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க கோரிக்கை
X

ஆலோசனை கூட்டம் 

முடி திருத்தும் நிலையங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில்,தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் 20-ம் ஆண்டு விழா மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடந்தது. மண்டல தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் மூர்த்தி வரவேற்றார். மண்டல துணை தலைவர் அதிரூபன், துணை செயலாளர் முனிரத்தினம், செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன், வெங்கடாஜலம், இளைஞரணி அமைப்பாளர்கள் ரவி, ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள வீடற்ற மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக்கோரி ஊர்வலம் நடத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுப்பது, பொருளாதாரத்தில் மருத்துவ சமுதாய மக்களை மேம்படுத்த வங்கிகளில் கடன் வசதி வேண்டும், முடி திருத்தும் நிலையங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும், முடி திருத்தும் தொழிலாளர்களின் தொழில் மேம்பாட்டிற்காக அரசு சான்றிதழுடன் அழகு கலை பயிற்சி வகுப்பு நடத்துவது, முடி திருத்தும் தொழிலை சேவை தொழிலாக கருதி மாநகராட்சியால் விதிக்கப்படும் தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story