பாதாள சாக்கடை திட்டம் குன்றத்துார், மாங்காடில் எப்போது?

பாதாள சாக்கடை திட்டம் குன்றத்துார், மாங்காடில் எப்போது?

பாதாள சாக்கடை திட்டம் 

குன்றத்துார், மாங்காடு நகராட்சிகளில் தனித்தனியே பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்துார், மாங்காடு பேரூராட்சிகள், கடந்த 2021ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டன. இந்த இரு நகராட்சிகளும் சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு வீடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாங்காடில் காமாட்சியம்மன் கோவிலும், குன்றத்துாரில் முருகன் கோவிலும் புகழ்பெற்ற ஆன்மீக தலமாக உள்ளன. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த இரு நகராட்சிகளிலும் 1.20 லட்சத்திற்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்த நகராட்சிகளில் இதுவரை பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்படவில்லை. இதனால், குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் குன்றத்துார், மாங்காடு நகராட்சிகளில் தனித்தனியே பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story