சுடுகாட்டு ஆக்கிரமிப்பை அகற்ற ஜமாபந்தியில் கோரிக்கை!
மனு அளித்த ஒடுகத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் 3வது வார்டு கவுன்சிலர்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் ஒடுகத்தூர் உள்வட்டத்திற்கான ஜமாபந்தி நடந்தது. இதில் ஒடுகத்தூர், மேலரசம்பட்டு, உமயம் பட்டு, வண்ணாதாங்கல், கத்தாரி குப்பம், மடையாப்பட்டு, அத்திகுப்பம், நேமந்தபுரம், வரதலம்பட்டு, பின்னத்துரை, கீழ்கொத்தூர், சேர்பாடி, கங்கசாணி குப்பம் ஆகிய கிராமங்களில் இருந்து பொதுமக்கள் 145 மனுக்களை ஜமாபந்தி அலுவலர் முருகனிடம் வழங்கினர்.
ஒடுகத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் சத்யவதி பாஸ்கரன் மற்றும் மூன்றாவது வார்டு கவுன்சிலர் ஜெயந்தி வெங்கடேசன் ஆகியோர் மனு அளித்தனர். அதில் 3-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு சுடுகாடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பிணத்தை புதைக்க போதிய இடவசதி இல்லை. எனவே ஆக்கரமிப்பை அகற்ற வேண்டும். மேலும் கிருஷ்ணா நகர் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், அரசுக்கு சொந்தமான 600 சதுர அடி இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து வருவதாகவும், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் கூறியிருந்தனர். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜமாபந்தி அலுவலர், தாசில்தார் தார்வேண்டா ஆகியோர் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டனர்.