மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் கோரிக்கை மனு
ஏப்ரல் மாத ஊதியத்தை உடனடியாக வழங்குமாறு, பெரம்பலூர் மாவட்டத்தில் பணியாற்றும் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சுகாதார அலுவலர் அலுவலகத்தில் மனு அளிதனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ்,பணிபுரியும் ஊழியர்கள் மே 27 ஆம் தேதி மாலை பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் மனு அளிதனர், இதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 95 பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும். இவர்களுக்கு மாதம்தோறும் குறைவான ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதுவும், முறையாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதில் கடந்த ஏப்ரல் மாத ஊதியம் இதுவரையில் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் வேப்பூர் வட்டார மேலாளரிடம் தெரிவிக்கும், போது அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் எழுது பொருள் உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்படவில்லை என்றும், இதனால் பாதிக்கப்பட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் மாவட்ட சுகாதார அலுவலர் பிரதாப்குமாரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்ததாகவும், மனுவை பெற்ற சுகாதார அலுவலர் விரைந்து நடவடிக்கை எடுத்து ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.