விபத்தில் உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், நெல்லை மண்டல தலைவருமான சுல்பிகர் அலி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டம் சங்குத்துறை கடற்கரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தெற்கு சூரங்குடியை சேர்ந்த அபூபக்கர் சித்திக் மகன் அஜாஸ் மீது ஈத்தாமொழி பகுதி சேர்ந்த கோபி என்பவர் ஓட்டி சென்ற கார் மோதியது. மேலும் காரை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்கியதால் காரில் இருசக்கர வாகனத்துடன் சிக்கி அஜாஸசு மார் மூன்று கிலோ மீட்டர் இழுத்து செல்லப்பட்டு சிதைந்துள்ளார்.
கார் தீ பிடித்ததில் மாணவர் உடல் கருகி உயிரிழந்தார். மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் அஜாஸ் குடும்பத்தினர் மகனை இழந்து பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்மந்த தொடர்பாக குடிபோதையில் வாகனத்தை இயக்கிய கோபி மீது கொலை வழக்கு பதிவு செய்வதோடு, அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். மேலும் உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு தமிழக அரசு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.