விளைநிலங்களை கையகப்படுத்துவதை தமிழ்நாடு அரசு தவிர்க்க கோரிக்கை

X
தமிழ்த் தேசிய பேரியக்க அமைப்பு பெ.மணியரசன்
பெருநிறுவனங்களுக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதை தமிழ்நாடு அரசு தவிர்க்க வேண்டும்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அலவந்திபுரம் கிராமத்தில் தமிழ்த் தேசிய பேரியக்க அமைப்பின் ஒன்பதாவது பொதுக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து துவக்கி வைத்த பெ.மணியரசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: திரு மண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து ஓராண்டாக போராடி வரும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட நிறைவேற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், தற்போதைய போராட்டம் தீவிர போராட்டமாக விரிவுபடுத்தப்படும். பெரு நிறுவனங்களுக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு, 6 பேர் மீது ரத்து செய்யப்பட்டது. எஞ்சியவர் மீதான குண்டர் சட்டத்தையும் அரசு திரும்ப பெற வேண்டும். திருச்சியில் அரசு எய்ம்ஸ் சித்த மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும் என்றார். கூட்டத்தில், இயக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன், பொருளாளர் அ. ஆனந்தன், துணைத் தலைவர் க.முருகன், துணை பொதுச் செயலாளர் க. அருணபாரதி மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்திருந்த தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Tags
Next Story
