விருத்தசீர ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

விருத்தசீர ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க  கோரிக்கை

புள்ளலூர் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள ஆற்றுப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புள்ளலூர் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள ஆற்றுப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த கணபதிபுரம் கிராமத்தில் இருந்து புள்ளலூர் செல்லும் சாலையின் குறுக்கே விருத்தசீர ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் மீது தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியே தினமும் பஸ், லாரி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது. மேலும் தண்டலம், புள்ளலூர், பள்ளம்பாக்கம், புரிசை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வேலை நிமித்தமாக அரக்கோணம், திருத்தணி, நெமிலி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பலர் சென்றுவருகின்றனர்.ஆண்டுதோறும் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

அப்போது வாகனங்கள் தரைப்பாலத்தை கடந்து செல்லமுடியவில்லை. இதனால் புள்ளலூர், தண்டலம் பகுதிகளில் இருந்து அரக்கோணம், திருத்தணி செல்வோர் மூலப்பட்டு, கம்மவார்பாளையம், பள்ளூர் வழியே சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றிவரவேண்டிய சூழல் ஏற்படுகிறது. கணபதிபுரம், சித்தூர், பரமேஸ்வரமங்களம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் தனியார் கம்பெனிகளுக்கு செல்வோர் முருங்கை, தக்கோலம் வழியே சுற்றிக்கொண்டு செல்கின்றனர். இதனை தவிர்க்க விருதசீர ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story