பட்டுக்கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க கோரிக்கை
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின், பட்டுக்கோட்டை வட்டக்கிளை சார்பில், 100 ஆவது மாத சிறப்புக் கூட்டம் கிளைத் தலைவர் கண.கல்யாணம் தலைமையில் நடைபெற்றது. வட்ட துணைத் தலைவர் த.சந்திரமோகன் வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அ.சண்முகம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மே மாதத்தில் பிறந்த சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ந.செல்வம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். செயலாளர் இரா.அண்ணாதுரை, பொருளாளர் சோம.ஆறுமுகம் அறிக்கைகளை முன் வைத்துப் பேசினர். வட்ட துணைத்தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
கும்பகோணம் வட்டக்கிளை தலைவர் ஏ.துரைராஜ், அரசு ஊழியர் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன், மாவட்டக் கருவூல அலுவலர் கோ.கணேஷ்குமார், பட்டுக்கோட்டை உதவிக் கருவூல அலுவலர் மா.ஸ்ரீதரன், மாவட்டத் தலைவர் ரெ.கலியமூர்த்தி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலச் செயலாளர் எம்.வி.செந்தமிழ்செல்வன் சிறப்புரையாற்றினார். நிறைவாக வட்ட இணைச்செயலாளர் ரெ.ஞானசூரியன் நன்றி கூறினார். பட்டுக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து, அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.