விவசாயிகளின் 50 வருட கனவை நிறைவேற்ற கோரிக்கை

விவசாயிகளின் 50 வருட கனவை நிறைவேற்ற கோரிக்கை

 பேய்குளம்

பேய்குளம் குளத்தை ஆழப்படுத்தி முழுவதுமாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது;

தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் குளத்தை ஆழப்படுத்தி முழுவதுமாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேர்வைக்காரன்மடம் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனுவில், "தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி அடுத்துள்ள பேய்குளம் குளமானது திருவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு சொந்தமான குளமாகும்.

கடந்த ஆண்டு மாமுதலமைச்சர் ஸ்டாலின் பதிவியேற்றபிறகு நிறைவேற்றப்படாத முக்கியமான 10 கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தார்கள். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் எம்பகுதி விவசாய பெருமக்களின் வாழ்வாதாரமான வாழை, நெல் விவசாயத்தை கருத்தில் கொண்டு மணல் மேடுகளாகவும், முட்செடி ஆகாயத் தாமரை ஆக்கிரமிக்கப்பட்டும் சுமார் 50 ஆண்டுகள் முழுவதும் தூர்வாரப்படாமல் தண்ணீர் விவசாயத்திற்கு தேக்கி வைக்க முடியாமல் மூன்று போகம் விளையும் இடத்தில் ஒரு போகம் கூட விளைய வழியில்லாமல் நெல் விவசாயமே காணாமல் போனதை மேற்கோள்காட்டி பேய்குளம் குளத்தை ஆழப்படுத்தி முழுவதுமாக தூர் வார பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு அளித்தேன்.

சட்டமன்ற உறுப்பினர் முதலமைச்சர், கனிமொழி எம்.பி அமைச்சர் அனிதா இராதா கிருஷ்ணண் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று கூட்டாம்புளி, திருமலையாபுரம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சி சிவஞானபுரம், தங்கம்மாள்புரம், சேர்வைக்காரன்மடம், சிவத்தையாபுரம், சக்கம்மாள்புரம், இருவப்புரம் பேய்குளம், காடோடிபண்ணை, போடமாள்புரம் சுற்றிலும் உள்ள விவசாயத்தை நம்பி வாழும் 5000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு மனு அளித்த்தார். மேற்படி மனு அந்த துறை அதிகாரிகள் பரிசிலினை செய்யப்பட்டு பேய்குளம் குளம் தூர் வார அளவீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும் நிலையில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் இந்த திட்டத்தை விரைவுபடுத்தி செயல்படுத்தி எம்பகுதி மக்கள் விவசாயம் செழிக்கவும் எங்கள் விவசாயிகள் வாழ்வாதாரம் உயரவும வழிவகை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story