சிவகாசியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை

சிவகாசியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை
சிவகாசியில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை...
சிவகாசியில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து பாதைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்... விருதுநகர் மாவட்டம், சிவகாசி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு,சப்-கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.இதில் சிவகாசி, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.கூட்டத்தில் மண்பானை,விவசாய தொழிலாளர்களுக்கும் இலவசமாக மண் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இதனை பயன்படுத்தி கனிம வளங்களை தவறாக கொள்ளையடிக்க முயற்சி நடக்கிறது.எனவே எங்கள் பகுதியில் எந்த தொழிலாளிக்கு கனிம வளங்கள் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை சம்பந்தப்பட்ட விஏஓ அலுவலகத்தில் தகவல் பலகையில் தெரிவிக்க வேண்டும்.விவசாய நிலம் வண்டி பாதையிலுள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று தாசில்தார் கடந்தாண்டு உத்தரவு பிறப்பித்தும் ஆக்கிரமிப்புஎடுக்கப்படவில்லைஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்க வேண்டும்.

நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பில் உள்ளது. சப்-கலெக்டர் விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆர்.டி.ஓ நேர்முக உதவியாளர் ராம்தாஸ், தாசில்தார் சரஸ்வதி, சப்-கலெக்டர் தலைமை உதவியாளர் அகஸ்தீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story