பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை
பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
பேரங்கியூர் அடுத்த கரடிப்பாக்கம் பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பேரங்கியூரை சேர்ந்த பொது மக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட பேரங்கியூர் அடுத்த கரடிப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் மதுவாங்கி குடித்துள்ளனர். பின்னர் போதை தலைக்கேறியதும் அவர்கள் பள்ளிக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மாணவர்கள் மதுகுடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி வருவதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விவசாயிகளும் மதுவாங்கி குடிப்பதால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க கரடிப்பாக்கம் அரசு பள்ளி அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை உடனே அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags

Next Story