கல்குவாரியில் இருந்து வேகமாக செல்லும் லாரியை சிறைப்பிடித்த கிராம மக்கள்
லாரியை சிறைப்பிடித்த கிராம மக்கள்
கல் குவாரியிலிருந்து வேகமாக செல்லும் லாரிகளால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதால் லாரி டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அருகே குன்னத்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியானது இயங்கி வருகிறது. இந்த கல் குவாரியிலிருந்து தினசரி சுமார் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் கருங்கல், ஜல்லி, எம்–சாண்ட், பி–சாண்ட் ஆகியவை ஏற்றிக்கொண்டு சாலையில் வேகமாக செல்வதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதாலும், இதனால் கால்நடைகள் உயிரிழப்பு நிகழ்வதாகவும் மேலும் சாலையானது உடனுக்குடன் பழுதடைவதால் லாரிகளை மாற்றுப்பாதையில் அனுப்பவும், கிராமப்பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கவும், வேகமாக செல்லும் லாரி டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த அணைகட்டு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story