சங்ககிரியில் வாக்குச்சாவடி மையங்களில் எல்லை கோடுகள் வரையும் பணி

சங்ககிரியில் வாக்குச்சாவடி மையங்களில் எல்லை கோடுகள் வரையும் பணி
X

எல்லை கோடுகள் வரையும் பணி 

சங்ககிரியில் வாக்குச்சாவடி மையங்களில் எல்லை கோடுகள் வரையும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட சங்ககிரி நகர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிமையங்களுக்கு முன்னர் பாதுகாப்பு எல்லை கோடுகளை வருவாய், நெடுஞ்சாலைத்துறையினர் வரைந்தனர். நா

டாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் நாமக்கல் மக்களவை தொகுதி, சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்ககிரி நகர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு எவ்வளவு தூரத்தில் முகாம் அமைத்து வாக்கு சேகரிப்பது,

வாக்காளர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் தூரம் ஆகியவற்றை அரசியல் கட்சியினர், வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வாக்குச்சாவடி மையத்திலிருந்து 100, 200 மீட்டர் அளவுகளை கணக்கீடு செய்து பாதுகாப்பு எல்லைகோடுகளை வரையும் பணியினை கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் சண்முகம் (சங்ககிரி).

தீனதயாளன் (சின்னாகவுண்டனூர்), சங்ககிரி மாநில நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் இப்பணிகளில் ஈடுபட்டனர்.

Tags

Next Story