தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் அறிமுகம் கூட்டம்
வேட்பாளர் அறிமுக கூட்டம்
வேலூர் மக்களவைதொகுதியிற்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய புதிய நீதிக்கட்சி தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இந்த வேலூர் பாராளுமன்ற தேர்தலில் நான்காவது முறையாக போட்டியிடுகிறேன்..
கடந்த தேர்தல்களில் நான் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட போது, அதிமுகவின் முக்கிய பொருப்பாளர் ஒருவர் திமுகவினருடன் கைகோர்த்து தனது மாப்பிள்ளை வெற்றி பெற வேண்டும் என்று உள்ளடி வேலைகள் செய்து என்னை தோற்கடித்தார்கள், அதிமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கு தான் சென்றது. அதற்கான ஆதரங்கள் என்னிடம் உள்ளது, இப்பொழுது அவர்கள் கூறுகிறார்கள் நான் முதுகில் குத்தினேன் என்று, அதிமுகவினர் தான் என்னை பழிவாங்கவே என் முதுகில் குத்தி என்னை கடந்த தேர்தல்களில் தோற்கடித்துள்ளார்கள்.
11 மாதங்கள் சிந்தித்து தற்போது நான் தெளிவாக உள்ளேன், வாணியம்பாடி மக்களால் வெற்றி பெற்ற திமுகவை அதே வாணியம்பாடியில் வைத்து 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் இது என் மானப்பிரச்சனை, என் முதுகில் குத்தியவர்களை நாம் மார்பில் குத்த வேண்டும் என ஆவேசமாக பேசினார். மேலும் இந்த கூட்டத்தில், பாஜக கட்சியினர், பாமக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ.பி.எஸ் அணியினர், சமத்துவ மக்கள் கட்சியினர், மற்றும் பல கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.