தஞ்சையில் பாசிச பாஜகவை தோற்கடிக்க ஜனநாயக மாதர் சங்கம் சூளுரை

தஞ்சையில் பாசிச பாஜகவை தோற்கடிக்க ஜனநாயக மாதர் சங்கம் சூளுரை
மாநிலக்குழு கூட்டம்
தஞ்சாவூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநில பயிற்சி வகுப்பு, மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், தஞ்சையில் மாநில பயிற்சி வகுப்பு மற்றும் மாநிலக் குழு கூட்டம் பிப்ரவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அகில இந்திய துணைச் செயலாளர் பி.சுகந்தி, மாநில தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் கே.ராதிகா, மாநிலப் பொருளாளர் பிரமிளா, மாநில செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்.கலைச்செல்வி, பி.கலைச்செல்வி, மாவட்டச் செயலாளர் இ.வசந்தி, மாவட்டப் பொருளாளர் என்.வசந்தா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், "100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி, கூலியை ரூ.650 ஆக அதிகரித்து வழங்க வேண்டும். சமுதாயத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு சம நீதி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை விடுபடாமல் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பாஜகவை தோற்கடிக்க முற்போக்கு அணிகளுடன் இணைந்து தீவிரமாக செயல்படுவது" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story