விழுப்புரம்: ஓட்டு எண்ணும் மையத்தில் தற்காலிக சுவர்கள் இடிப்பு

விழுப்புரம்: ஓட்டு எண்ணும் மையத்தில் தற்காலிக சுவர்கள் இடிப்பு

தற்காலிக சுவர் இடிப்பு

ஓட்டு எண்ணும் மையத்தில் தற்காலிக சுவர்கள் இடிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் லோக்சபா தொகுதி தேர்தலுக்கு பதிவாகிய ஆறு சட்டசபை தொகுதிகளின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விழுப்புரம் அரசு கலை கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இதற்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்கூட்டியே, ஓட்டு பெட்டிகளை அடுக்கடுக்காக வைப்பதற்காக சுவர்கள் கட்டி, கூண்டுகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் பணிகள் கடந்த 4ம் தேதி நடைபெற்றது. இந்த பணிகள் முடிவடைந்து, மீண்டும் அரசு கல்லுாரியில் மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கவுள்ளது. தற்போது கலந்தாய்வு நடந்து வரும் நிலையில், ஆறு சட்டசபை தொகுதி ஓட்டுகளை எண்ணுவதற்காக தயார் படுத்திய அறையில் உள்ள தற்காலிக கற்சுவர்களை அகற்றும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு முறை தேர்தலிலும், ஓட்டு எண்ணும் பணிகளுக்கு போதிய இடவசதி இல்லாததால், அதிகாரிகள் இந்த அரசு கலை கல்லுாரி மையத்தை பயன்படுத்துகின்றனர். இங்கு, ஒவ்வொரு முறையும் ஓட்டு எண்ணுவதற்காக சுவர்களை கட்டுவதும், இடிப்பதும் என அரசு பணம் விரயமாகி வருகிறது.

Tags

Next Story