மாமன்ற கொறடா வீட்டு சுவர் இடிப்பு பரபரப்பு!

X
வீட்டு சுவர் இடிப்பு
தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் மற்றும் வழக்கறிஞருமான மந்திர மூர்த்தியின் வீட்டு காம்பவுண்ட் சுவர் மாநகராட்சி அதிகாரிகளால் இடிக்கப்பட்டதால் பரபரப்பு
தூத்துக்குடி மாநகராட்சி பாளையங்கோட்டை சாலை பாலிடெக்னிக் அருகில் ஆக்கிரமிப்பு இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் சென்றுள்ளனர் அப்போது அந்தப் பகுதியில் இருந்த அதிமுக மாநகராட்சி கவுன்சிலரும் அதிமுக கொறடாவுமான வழக்கறிஞர் மந்திரமூர்த்தி என்பவரது வீட்டு காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ள இடம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி அதை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கினர் முறையாக பட்டா உள்ள தனது இடத்தை இடிக்க அதிமுக கவுன்சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் இதையும் மீறி மாநகராட்சி அதிகாரிகள் வீட்டின் காம்பௌண்ட் சுவரை எடுத்து தரைமட்டம் ஆக்கினர் இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து அதிமுக கவுன்சிலர் மந்திரமூர்த்தி தெரிவிக்கையில் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் மதுரை உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்களை கடைபிடிக்காமல் ஒருதலை பட்சமாக ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக தனது வீட்டை இடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் இப்பகுதியில் திமுகவினருக்கு சொந்தமான ஒரு கோவில் ஆக்கிரமிப்பில் உள்ளது அதையெல்லாம் எடுக்கவில்லை முறையான பட்டா வைத்துள்ள தனது வீடு மட்டும் இடிக்கப்பட்டுள்ளது என அதிமுக மாமன்ற உறுப்பினர் மந்திரமூர்த்தி தெரிவித்தார்.
Next Story
