ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

சீர்மரப்பினர் நல சங்கம் சார்சில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சீர்மரப்பினர் நல சங்கம் சார்சில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சீர்மரமிப்பினர் நல சங்கத்தின் 68 சாதி சமூகத்தினர் ஒன்றிணைந்து, அம்மக்களுக்கு வழங்கப்படும் DNC, DNT என்ற இரட்டை சான்றிதழை ஒரே சான்றிதழ்- ஆக வழங்க கோரியும், இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் DNT மக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 2018ல் அதுல்ய மிஸ்ரா தலைமையில் 4 IAS அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு, விரிவான ஆய்விற்கு பிறகு, மீண்டும் அவர்களுக்கு DNT சான்று வழங்க எந்த தடையுமில்லை என்று பரிந்துரைத்து மீண்டும் திரும்பப்பெறப்பட்டது. இருப்பினும் கற்பனையான காரணங்களுக்காக உலகில் எங்கும் இல்லாத வகையில் மத்திய அரசிற்கு DNT என்றும் மாநில அரசுக்கு DNC என்றும் ஒரே நபருக்கு இரண்டு சாதிச்சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டு அந்த அநீதி நீடித்துவருகின்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த சமூக அநீதியை நீக்கி ஒரே DNT சான்று வழங்கப்படும் என்று வாக்குறுதியளித்தார். இந்த வாக்குறுதி கவனம் பெறாமால் உள்ளது. சட்டம் 45/1994 சரத்து 7ன்படி அரசுக்கு அச்சட்டத்திலுள்ள DNC வகுப்பினரை DNT என்று மாற்ற அதிகாரமுள்ளது. என்பதை 2022ல் மயிலேறும் பெருமாள் வழக்கு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. எனவே தேர்தல் வாக்குறுதியை நிறைவாற்ற வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சீர்மரப்பினர் சங்க மாநில தலைவர் மதுரை தவமணி அம்மாள், மாநில செயலாளர் தேனி அன்பழகன், மாநில ஒருங்கிணைப்பாளர் கடலூர் துரைமணி, முன்னிலையில் மற்றும் 68 சாதி சமுகத்தின் தலைவர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story