ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில், மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.  

வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில், மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

சேலம் மாவட்டம்,மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட செயலாளர் ஆர்.முருகன் தலைமை வகித்தார். இதில் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான கால முறை ஊதியம் ரூபாய் 15,700 வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் கிராம உதவியாளர்களுக்கு சதவீத அடிப்படையில் குறைந்தபட்சம் ரூபாய் 7000 பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் ,அரசாணை 33-ல் உரிய திருத்தம் மேற்கொண்டு தொடர்ந்து கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர்களுக்கு தொடர்ந்து மாற்றுத்திறனாளி ஊர்ந்திப்படி வழங்க வேண்டும், ஓட்டுநர் பயிற்சி முடித்த கிராம உதவியாளர்களுக்கு ஓட்டுனர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story