வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டுனர்கள் மீது பொய் வழக்கப் போடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கோஷமாக எழுப்பி பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விபத்து ஏற்படுத்தி விட்டு தலைமறைவாகி விடும் ஓட்டுநர்கள் மீது பத்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஏழு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கும் (HIT& RUN ) மத்திய அரசின் புதிய வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். விபத்தில் உடல் ஊனமுற்றாலும் அல்லது மரணம் அடைந்தாலும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஊனத்திற்கு ஏற்ப இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும், போக்குவரத்து அலுவலர்கள் லஞ்சம் என்ற பெயரில் வாகன ஓட்டுனர்களை நசுக்குவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செல்லத்துரை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜீ துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் கவின் குமார் வரவேற்றார். மாநில இணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைத் தலைவர் பழனியப்பன், மாவட்ட செயலாளர் தமிழரசன், மாவட்ட பொருளாளர் லோகேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார் மற்றும் மாவட்ட மேற்பார்வையாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில, மாவட்ட மற்றும் நகர அனைத்து சமூக நிதி ஒட்டுநர்கள் தொழிற்சங்கத்தினர் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா்.

Tags

Next Story