காங்கிரஸ் எம்பிக்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்
பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி தீரஜ் சாஹி நிறுவனங்களில் ரூபாய் 350 கோடி பிடிபட்டது. இதுதொடர்பாக காரைக்குடியில் காங்கிரஸை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து விளக்கு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் நாகராஜ், மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாட்டின் வளர்ச்சி, ஒற்றுமைக்கு தடையாக இந்தியா கூட்டணி உள்ளதாக தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்
Next Story