தேனியில் தேமுதிக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

தேனியில் தேமுதிக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

தேமுதிக 

தேனியில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

தேனியில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து 55 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன உரையை தேர்தல் பணிக்குழு தலைவர் அழகர்சாமி நிகழ்த்தினர் .

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் போதை இல்லாத தமிழகத்தினை உருவாக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் , பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்ற கோரியும் , தெருவுக்கு தெரு மது விற்பனையை தடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட , ஒன்றிய கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்

Tags

Next Story