கேத்தாண்டப்பட்டி சர்க்கரை ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கேத்தாண்டப்பட்டி சர்க்கரை ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

கேத்தாண்டப்பட்டி சர்க்கரை ஆலையின் முறைகேடுகளை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்கா, கேத்தாண்டப்பட்டியில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இரா.முல்லை தலைமையில் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழலில் ஈடுபடும் சர்க்கரை ஆலை அலுவலக மேலாளர் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுத்திடுக இந்த நிர்வாகத்தை கண்டித்தும் கரும்பு அறவையை உரிய காலத்தில் செய்திடு. 2023-24 ஆம் ஆண்டு கரும்புக்கான விலையை டன்னுக்கு ரூபாய் 5000 அறிவித்திடுக . கரும்பு வெட்டு கூலியை நிர்வாகமே ஏற்றுக் கொள் ஆலைக்கழிவை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கிடு.

மத்திய மாநில அரசுகள் அரவை துவங்கும் ஒவ்வொரு ஆண்டும் முத்தரப்பு கூட்டத்தை ஜனநாயக முறைப்படி நடத்தி கரும்புக்கான விதையை அறிவித்திருக்க திருப்பத்தூர் சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தியை துவங்கியது சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கிடுக. கரும்பு உற்பத்தியாளர்களை மட்டுமே பங்குதாரர்களாக சேர்க்க வேண்டும் மறைந்த மற்றும் வயது முதிர்ந்த பங்குதாரர்களின் வாரிசு பேரில் பங்குகளை மாற்றிக் கொடு சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயங்கிடவும் கரும்பு உற்பத்தியாளர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ரகு, தீபாபூபதி, கண்மணி பழனி, ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story