பட்டியல் இனத்தவர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பட்டியல் இனத்தவர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் அருகே பட்டியல் இனத்தவர் படுகொலையை கண்டித்து தலித் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.


திண்டுக்கல் அருகே பட்டியல் இனத்தவர் படுகொலையை கண்டித்து தலித் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலித் கூட்டமைப்பு சார்பாக நிலக்கோட்டை நடுப்பட்டி கிராமத்தில் ஆண்டார் என்பவர் படுகொலை செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமை வகித்தார். ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: நடுப்பட்டியை சேர்ந்த பட்டியல் இனத்தவர் படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.போலீசார் நியாயமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த பட்டியல் இனத்தவருக்கு உரிய நஷ்ட ஈடு அவர் குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். என்றனர்.

Tags

Next Story