நீர் நிலைகளில் சாயக்கழிவு கலப்பதை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
குளம் குட்டைகளில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் சாய் ஆலைகள் முறைகேடாக சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் அருகில் உள்ள குளம் குட்டை உள்ளிட்டவற்றில் கலப்பதாகவும் இதன் காரணமாக அந்த பகுதிகளில் இருக்கும் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாகவும் சாயக்கழிவு நீர் கலப்பதை உரிய ஆய்வு செய்து சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இது குறித்து அந்தப் பகுதியில் ஆய்வு செய்ய சென்ற தமிழ்நாடு நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் மீது சாய ஆலை தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட புகார் குறித்து வீரபாண்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதை கண்டித்தும் சாய ஆளை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு நீர் நிலை பாதுகாப்பு இயக்கம் மற்றும் விவசாயிகள் இணைந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story