வளையபட்டி பகுதியில் சிப்காட் வருவதை எதிர்த்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
வநாமக்கல் மாவட்டம்,மோகனூர், வளையபட்டி பகுதியில் சிப்காட் அமைப்பதை தவிர்க்க வலியுறுத்தி 49கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவளித்து வருகின்றனர். இன்று (ஜனவரி 21) 50வது கட்ட போராட்டமாக வளையபட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு சிப்காட்டால் பாதிக்கும் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் இருந்து அகல் சட்டியில் மணலை எடுத்து அதில் கற்பூரம் மற்றும் ஊதுவத்தி ஏற்றி தங்களது பகுதிகளில் சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
கம்யூனிஸ்ட் பொருப்பாளர் ரவீந்திரன்,சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் ராம்குமார், பழனிவேல், சரவணன், தண்டபாணி உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.