கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகமான பாலன் இல்லம் தாக்கப்பட்டதை கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தில் மணிக்கூண்டு அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜனசக்தி பொறுப்பாளர் உட்பட 10 பேர் கண்டன உரை நிகழ்த்தினர்.இதில் மாவட்டச் செயலாளர் மணிகண்டன் பேசியதாவது: கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தாக்கப்படுகின்றனர். பொது நலனுக்கு பாடுபடும் அவர்கள் தாக்கப்படுவது வேதனைக்குரியது. இந்த அவலத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். இது மறியல் போராட்டமாக கூட மாறும். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story