திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் 

திருப்பத்தூரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், கையாளகாத திமுக அரசால் ,காவல் துறை அசிங்கம் பட்டு கொண்டு இருக்கிறது என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திமுக மீது கடும் தாக்கு. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பள்ளி கல்லூரி மாணாக்கர்களை சீர் அழிக்கும் நிலைக்கு தள்ளப்படும் நிர்வாக திறனற்ற திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர்,மாவட்ட கழக செயலாளருமான கே.சி.வீரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ் , மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர் உள்ளிட்ட ஏராளமான அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் கடத்தலை தடுக்க தவிர திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கருணாநிதி சாராய கடைக்களையும்,மு.க ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதியாக டாஸ்மாக் கடைகளை மூடவோம் என சொல்லி ஆட்சிக்கு வந்தனர். ஆனால் இதுவரை டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறினார்.

மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா மற்றும் எடப்பாடியார் தமிழகத்தை கட்டுக்கோப்பாக வைத்திருந்தனர் எனவும் தற்போது கையாளகாத திமுக அரசால் காவல் துறை அசிங்கம் பட்டு கொண்டு இருக்கிறது என திமுக மீது கடும் விமர்சனம் செய்தார்.

Tags

Next Story