செங்கிப்பட்டியில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

செங்கிப்பட்டியில் ஆளுநரை  கண்டித்து ஆர்ப்பாட்டம் 
ஆர்ப்பாட்டம்
பூதலூர் அருகே செங்கிப்பட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து மாநில உரிமைகளுக்கு எதிராகவும், சட்ட வரம்புகளை மீறியும், தனது அரசு பொறுப்பை மறந்து, எதிர்க்கட்சி அரசியல் தலைவர் போல, மகாத்மா காந்தி உள்ளிட்ட விடுதலைப் போராட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில் அவதூறான செயல்பாட்டை வன்மையாக கண்டித்தும், தீக்கிரையான வீரவெண்மணி தியாகிகளின் நினைவகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதை கண்டித்தும், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில், தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவு தினமான, ஜன.30 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், பூதலூர் தெற்கு ஒன்றியச் சி.பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி கண்ணன், எஸ் தமிழ்ச்செல்வி, திமுக ஒன்றியச் செயலாளர் எஸ்.முருகானந்தம், மதிமுக ஒன்றியச் செயலாளர் ஆர்.நந்தகுமார், விசிக அந்தோணி, திமுக மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பொன்.க.லெனின், தி.க மு.சேகர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ரமேஷ், மருதமுத்து, ராஜாங்கம், சித்திரவேல், அறிவழகன், மூத்த தோழர்கள் பி.தங்கமணி, ஏ.ஜி.தங்கவேல், பி.குணசேகரன், கிளைச் செயலாளர்கள் சந்திரபோஸ், மாரிமுத்து, வெங்கடாஜலம், மாதர் சங்கம் மலர்கொடி மற்றும் கிளைத் தோழர்கள், முன்னணி ஊழியர்கள் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story