நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத்துறை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் கொன்னையாறு கிராமம் சக்கரம் பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகில் சண்முகம் என்பவர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பனைமரம் வேப்பமரம் உள்ளிட்டவைகளை வேரோடு பிடுங்கி மூணு லாரிகள் மூலம் விற்பனை செய்துள்ளார். மேலும் அரசு புறம்போக்கு நிலத்தில் மண்ணை அள்ளி விற்பனை செய்துள்ளார். சுடுகாட்டு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இப்படி பல்வேறு குற்றங்கள் செய்த அடிப்படையில் வருவாய்த்துறையினர் மூலம் புகார் அளிக்கப்பட்டு பின்னர் சுடுகாட்டு இடத்தை அரசு அதிகாரிகள் மீட்டனர். மேலும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை வெட்டியவர் சண்முகம் மீது நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்காததால் அந்த பகுதி பொதுமக்கள் எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மாலை நெடுஞ்சாலை துறையை கண்டித்தும் சண்முகத்தை கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமை வகித்தார். மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலை துறையை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Tags

Next Story