ஜாதியை சொல்லி திட்டிய மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

X
ஆர்ப்பாட்டம்
நடத்துனரை ஜாதியை சொல்லி திட்டியதாக மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருபவர் மணிமுத்து. பட்டியல் இனத்தை சேர்ந்த மணிமுத்துவை போக்குவரத்து கிளை மேலாளர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாதியை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து தேவகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து, சிஐடியு , AlCTU தொழிற்சங்கத்தினர் தேவகோட்டை கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய சமாதான பேச்சு வார்த்தையை அடுத்து, அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
Next Story
