எம்.பிக்கள் இடைநீக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.பிக்கள் இடை நீக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பாராளுமன்ற பாதுகாப்பு குறித்து பிரதமரும் உள்துறை அமைச்சரும் பதில் அளிக்க வேண்டும் என கேட்ட 146 பாராளுமன்ற உறுப்பினர்களின் இடை நீக்கத்தை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இடைநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மோடி அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அண்ணா சிலை முன்பு நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமை தாங்கினார், மத்திய அரசை கண்டித்தும் மோடி அரசை கண்டித்தும் நாடாளுமன்றத்தில் பதில் சொல்லாத அமித் ஷாவை கண்டித்தும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள பாஜக அரசை கண்டித்தும் 146 எம்பிக்கள் இடைநீக்கத்தை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், ஜெகநாதன்,மாவட்ட துணைத் தலைவர்கள் தங்கராஜ், காசி விஸ்வநாதன், கிருஷ்ணன், செல்வி,மணி கை அருணாச்சலம், நகரத் தலைவர்கள் பாலதண்டாயுதம், ஜானகிராமன், ராஜேந்திரன், தங்கராஜ் ராஜா, ஹரி,மணி வட்டாரத் தலைவர்கள் குப்புசாமி, பழனிச்சாமி முத்துச்சாமி, தங்கவேல் ராஜா, சுரேஷ், கார்த்தி ரவிச்சந்திரன் மாவட்ட பொது செயலாளர் கோவிந்தன், நந்தகோபால் கோபாலகிருஷ்ணன், ஈஸ்வரன்,மாநில எஸ் சி அணியின் நிர்வாகி தங்கராஜ், ஆதிதிராவிட மாவட்ட தலைவர் சந்திரமோகன்,மருத்துவ அணி மாவட்ட தலைவர் செங்கோட்டையன், மாவட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணன்,சந்திரன் கணேசன் கந்தசாமி சுந்தர்ராஜன், பெரியசாமி மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.