திருச்செந்தூர் கோவில் இணை ஆணையரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர் கோவில் இணை ஆணையரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

கந்த சஷ்டி விழாவில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி தன்னிச்சையாக பாஸ் வழங்கியதாக கோயில் இணை ஆணையரைக் கண்டித்து வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் சுவாமிநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முருகன் தொடக்கவுரையாற்றினாா். மாவட்ட இணைச் செயலா் வாமணன் வரவேற்றாா். கோரிக்கையை விளக்கி, மாவட்டச் செயலா் ஞானராஜ் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில், மாநிலச் செயலா் பாா்த்திபன், மாநில துணைப் பொதுச் செயலா் வெங்கடேசன், மாவட்டத் தலைவா் தவமணி பீட்டா், மண்டல செயலா் கணேசன், தமிழ்நாடு கல்வித் துறை நிா்வாக அலுவலா்கள் சங்க மாநிலச் செயலா் பேச்சியம்மாள், தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்க நிா்வாகி ராமச்சந்திரன், விஏஓ சங்க மாவட்டத் தலைவா் கணேசபெருமாள், சிஐடியூ ஒன்றியக் குழுச் செயலா் சிவதாணுதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாநில துணைத் தலைவா் செந்தூர்ராஜன் நிறைவுரையாற்றினாா்.

Tags

Next Story