நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்து எலச்சிபாளையத்தில் ஆர்ப்பாட்டம்

X
ஆர்ப்பாட்டம்
தேசிய மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்காததால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து எலச்சிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எலச்சிபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரங்களை வெட்டியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மக்கள் ஆர்பாட்டம் நடத்தினர். எலச்சிபாளையம் அருகே, சக்கராம்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான திருமணிமுத்தாறு மேம்பாலம் அருகில் கடந்த 10தினங்களுக்கு முன்னர், சண்முகம் என்பவர், நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட பனைமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்களை வேரோடு பிடுங்கி மூன்று லாரிகள் மூலம் விற்பனை செய்துள்ளார். மேலும், அரசுபுறம்போக்கு நிலத்தில் மண்ணை அள்ளி விற்பனை செய்துள்ளார். அதுமட்டுமல்லாது, பலதலைமுறைகளாக பயன்படுத்திவந்த சுடுகாட்டு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். மக்கள் புகார் அளித்ததின்பேரில், சுடுகாட்டு நிலத்தை மட்டும் அதிகாரிகள் மீட்டர். நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் மரங்களை வெட்டி, மண்அள்ளிச்சென்றவர்மீது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நெடுஞ்சாலைத்துறை கண்டித்து, அப்பகுதி கவுன்சிலர் சுரேஷ் தலைமையில், நேற்று மாலை 5மணிக்கு எலச்சிபாளையம் பஸ்நிறுத்தத்தில் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்பாட்டம் நடத்தினர். சி.பி.எம்., ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்டக்குழு உறுப்பினர் பழனியம்மாள், கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், நாம்தமிழர் கட்சியின் பரமத்தி தொகுதி செயலாளர் சதீஷ், மாவட்ட செயலாளர் தர்மராஜ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இறுதியில், நல்லாம்பாளையம் தர்மகர்த்தா நல்லமுத்து நன்றியுரையாற்றினார்.
Tags
Next Story
