பட்டா வழங்கக் கோரி மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக ஆர்ப்பாட்டம்

பட்டா வழங்கக் கோரி  மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

ஆத்தூர் அருகே ஈச்சம்பட்டி பகுதி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்காத தமிழக அரசை கண்டித்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக 50 குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈச்சம்பட்டி மண்ணுடையார் தெருவில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 50 வீடுகளுக்கும் பட்டா இல்லாமல் பல ஆண்டுகளாக இருந்தவந்த நிலையில் அவர்கள் பட்டா கேட்டு மனு அளித்து வந்துள்ளனர் இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 18 வீடுகளுக்கு மட்டும் அரசு வருவாய் துறை சார்பில் இலவச பட்டா வழங்கியுள்ளது.

மேலும் 30 வீடுகளுக்கு மேல் இன்னும் பட்டா வழங்காமல் உள்ளதால் அந்த குடியிருப்பு வாசிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை பட்டா கேட்டு மணு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த 50 குடும்பத்தினரும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்யப்பட்டு தேர்தல் புறக்கணிப்பு வாசகம் எழுதிய பேனருடன் 50க்கும் மேற்பட்டோர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க விட்டால் கட்டாயம் தேர்தலை புறக்கணிப்போம் என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story