திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று திங்கட்கிழமை மதியம் 12 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக அரசினை கண்டித்து அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மகளிர் அணி மாணவர் அணி சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது எனவும் பள்ளி பயிலும் மாணவர்கள் கைகளிலும் எளிதாக போதைப்பொருட்கள் கிடைக்கும் வகையில் தற்போது தமிழகம் போதைப்பொருளால் சீரழிந்து வருகிறது எனவும் போதைப் பொருளால் ஒன்றரை லட்சம் கோடி வரை திமுகவிற்கு லாபம் கிடைத்துள்ளது. போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதீக் முதலமைச்சர் குடும்பத்துடன் பழகி வந்துள்ளார். அனைவரிடமும் பழகிய ஒரு நபர் போதைப்பொருள் கடத்தல் மன்னனாக உள்ளார் எனவும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், கோவிந்தசாமி, கழக அமைப்புச் செயலாளர் சிங்காரம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி கழக விவசாய அணி செயலாளர் டி ஆர் அன்பழகன் கழக மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் யசோதா மதிவாணன் நல்லம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் என் ஜி எஸ் சிவப்பிரகாசம் தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல இணைய செயலாளர் பிரசாத் பழனி நகர அவை தலைவர் அம்மா வடிவில் நகர துணை செயலாளர் துணை செயலாளர் மலர்விழி சுரேஷ் நகர இணை செயலாளர் தனலட்சுமி சுரேஷ் மாவட்ட பிரதிநிதி வேல்முருகன் நகர மன்ற உறுப்பினர்கள் ராஜாத்தி ரவி தண்டபாணி அலமேலு சக்திவேல் முன்னா. சத்யா கார்த்திக் செந்தில்குமார் உமையாம்பிகைநாகேந்திரன் நாகராஜன் மாதேஷ் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன் வேல். தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் பிரசாத் மாணவரணி செயலாளர் செந்தில் கூட்டுறவு பண்டாங்க சாலை இயக்குனர்கள் மாதேஷ். ரஞ்சித்.. அழகேசன். ஆனந்தன் அர்ஜுனன் ஜீவா முனுசாமி வடிவேல். கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story