பெரம்பலூரில் அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் சார்பில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


பெரம்பலூரில் அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் சார்பில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூரில் அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் சார்பில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் சார்பில் கட்டுமான பொருட்களான எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை ஏற்றத்தினால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அரசுக்கும், கட்டுமான பொறியாளர்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் தவித்து வரும் தங்களது வாழ்வாதாரத்தை காத்திட தமிழ்நாடு அரசு எம்.சண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வினை குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிப்ரவரி 27 ஆம் தேதி அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட பொறியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெரம்பலூர் மாவட்ட ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட கட்டுமான தொழிலில் துணைத் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story