சுகாதாரத்துறை அனைத்து பெண் அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சுகாதாரத்துறை அனைத்து பெண் அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டம் 

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத்துறை அனைத்து பெண் அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை அனைத்து பெண் அலுவலர் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சுகாதாரத்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

அதுவரை கூடுதல் பணியிடங்களுக்கு பொறுப்புப்படி வழங்க வேண்டும். துணை சுகாதார மையத்துக்கு ஸ்டாப் நர்சிங் முடித்தவர்களை பணி நியமனம் செய்வதை தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை ஆன்லைனில் கட்டாயமாக பதிவு செய்வதை ரத்து செய்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சங்க நிர்வாகிகள் வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமியிடம் வழங்கினர்.

Tags

Next Story