திருத்தணியில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருத்தணியில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு குற்றவியல் சட்டங்கள் திருத்தி புதிய சட்டங்களை ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வர உள்ள நிலையில், புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்ப்படுத்துவதை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் மூன்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் 50க்கும் மேற்ப்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்ப்படுத்துவதை கண்டித்தும், அச் சட்டங்கள் திரும்ப பெற வலியுறுத்தி நீதிமன்ற நுழைவாயில் பகுதியில் கண்டன கோஷ்ங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story