தர்மபுரியில் போக்குவரத்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி பாரதிபுரம் அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இன்றுசெவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் தர்மபுரி பாரதிபுரம் அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பு சி ஐ டி யு தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி ஐ டி யு மண்டல தலைவர் முரளி. பொதுச் செயலாளர் மனோன் மணி . நாகராஜன் மாநில செயலாளர் நாகராஜன். ஆகியோர் சிறப்புரையாற்றினார்.வேலை நிறுத்தத்தையொட்டி உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை மீறி செயல்படும் தருமபுரி TNSTC நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம். CITU தலைவர் C.ரகுபதி உள்ளிட்ட நிர்வாகிகளின் பணியிடமாறுதலை ரத்து செய்ய வேண்டும் .ஜாதியின் பெயரால் தொழிலாளர்களை பிளவுபடுத்தும் அரூர் கிளை மேலாளரை சஸ்பென்ட் செய்ய வேண்டும் சிறு, சிறு குற்றங்களுக்கு கூட அதீத தண்டனை வழங்கும் முறையை கைவிடுக என்று ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்.
Next Story