கூட்டுறவு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
பதவி உயர்வு பெற்றவர்களை வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யும் உத்தரவை திரும்ப பெறக்கோரி விருதுநகர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் பதவி உயர்வு பெறும் ஊழியர்களை சொந்த மாவட்டத்திலேயே மண்டல ஒதுக்கீடு செய்யக் கூறியும் ஜெ. ஐ ல் இருந்து எஸ்ஐ பதவியில் உயர்வு பெற்றவர்களுக்கு வேறு மாவட்டத்தில் மண்டல ஒதுக்கீடு செய்து பிரபிக்கப்பட்ட ஆணையை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட செயலாளர். அந்தோணி ராஜ் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகளை கோஷங்களாக வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story