நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். குமார் வரவேற்றார்.
தனசேகரன், குமார், சீனிவாசன், சக்திவேல், சபாபதி முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை பணியாளர் சங்க சங்க மாநிலத் துணைத் தலைவர் உமா சங்கர், கதிரேசன் ஆகியோர் சிறப்புரையாற்றி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். பணியாளர்களிடம் பிடித்தம் செய்யும் பிஎப் நிதியை பிஎப் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கழிப்பிட வசதி கட்டித் தர வேண்டும்.
மருத்துவ காப்பீடு திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜான் ஜோசப் ஏராளமான ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
