கண்களில் கருப்பு துணி கட்டி அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் திருவள்ளுவர் சிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் சார்பில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்களின் கண்ணில் கருப்பு துணி அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,70 வயது அடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்,தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850/- சத்துணவு, அங்கன்வாடி,வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத்தர்கள் மற்றும் வனத்துறை தொகுப்பு புதிய ஊழியர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டில் காசில்லா மருத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் ,உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணன்,மற்றும் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்களில் கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.