முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

விருதுநகரில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பாக மாவட்ட தலைவர் வாஞ்சிநாதன் தலைமையில், தமிழக அரசு சிபிஎஸ்இ திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பழைய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.கடந்த 2009 க்கு பின்பு பணியாற்றிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதியப் பேரிழப்பான ஊதிய முரண்பாட்டை சரிசெய்திட வேண்டும்.

புதிய ஊதிய குழுவில் முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதிய விகிதத்தில் உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அளித்து வரும் அனைத்து சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அளித்திட தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,கற்றல் கற்பித்தல் பணிகளில் மட்டுமே ஆசிரியர்களை கல்வித்துறை ஈடுபடுத்த வேண்டும். EMIS உள்ளிட்ட கல்வி சாரா பணிகளை ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது, IFHRMS முறையில் தாமே பிடித்தம் செய்யும் நடைமுறையை கைவிட்டு பழைய நடைமுறையிலேயே வருமான வரி பிடித்தம் செய்வதை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐம்பதுக்கு மேற்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags

Next Story