கருப்பு சட்டை அணிந்து ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம்.
பொது விநியோகத் திட்டத்தை தனித்துறையாக தெரிவிக்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், என்பன உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாவட்ட தலைவர் ரமேஷ், செயலாளர் பொன்னர், மாநில துணைத்தலைவர் பிச்சை பிள்ளை மற்றும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக வந்தனர் அப்போது அவர்களிடம் கண்டோன்மென்ட் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.
Next Story